நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து.
இந்நிலையில் வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். வெங்காயத்தின் மேல் பகுதியில் காணப்படும் பூஞ்சைகள், பூமியின் கீழ் உள்ள பூஞ்சைகள். இதற்கும் கருப்பு பூஞ்சையை உருவாக்கும் வைரசுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.