வெங்காயத் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கொத்தமல்லி தழை – ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதே வாணலியில் உளுந்தம் பருப்பு ,பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பின் மிக்ஸி ஜாரில் ஒரு கொட்டை புளி, உப்பு மற்றும் உளுந்தம் பருப்பையும் சேர்த்து முதலில் அரைக்கவும். பாதி அரைபட்டதும், அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக வாணலியில் கடுகு சேர்த்து தாளித்து, அதில் அரைத்த துவையலையும் போட்டு கிளறி நன்றாக வதக்கி இறக்கவும். இதை இப்படி செய்தால் 2 நாள் கெடாமல் இருக்கும்.