Categories
சென்னை மாநில செய்திகள்

வெங்காய விலை ஒரே நாளில் ரூபாய் 20முதல் 40வரை குறைந்தது …!!

மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் 140வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

onion க்கான பட முடிவு

1கிலோ 120க்கு விற்பனை செய்யப்பட்ட நடுத்தர வெங்காயம் 100ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .மேலும் வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை  பார்த்து 100க்கும் கீழ் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது .சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோவுக்கு 20ரூபாய் முதல் 30ரூபாய் வரை விற்பனை குறைந்துள்ளது  .நேற்று 160ரூபாய் 170ரூபாய் என விற்கப்பட்ட வெங்காய விலை 120ரூபாய் 130ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

Categories

Tech |