கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில், சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கார் வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்துகின்றோம். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 4:30 மணியளவில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.