பீரங்கி குண்டு வெடித்ததில் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெட் மாகாணம் நாட் அலி மாவட்டத்தில் மத பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த மத பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்று கிடைத்துள்ளது. இந்த நிலையில் அது வெடிகுண்டு என்பது அறியாத அந்த சிறுவர்கள் அதை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்று விளையாடி உள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த பீரங்கி கொண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதில் அந்த பகுதியே அதிர்ந்து போனது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி ஏழு முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.