திரிபுராவில் உள்ள அகர்தலா என்ற பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக கட்சி அலுவலகமானது, இந்த கலவரத்தால் கடுமையாக சேதப்படுத்தப் பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த கலவரத்துக்கு எதிராக இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனவே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.