ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 27 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவமாக பரவி வருவதால் தினமும் 8,000 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கென்று மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததுள்ளது. இதனால் மருத்துவமனை மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த கோர சம்பவத்தினால் 27 நபர்கள் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ஈராக்கின் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கையை குறிப்பிடவில்லை.