Categories
மாநில செய்திகள்

வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக் பேட்டரி…. நொடியில் தப்பிய உயிர்கள்…. சென்னையில் பயங்கரம்….!!!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன்(33) என்பவர் வசித்து வருகிறார் இவர் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னுடைய எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு உறங்கச் சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவு 1:30 மணிக்கு பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் தீ வீட்டில் பரவத் தொடங்கியது. உடனே சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்து ஈஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் எழுந்துள்ளன.

அதன்பிறகு அவசரஅவசரமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் வெளியே வந்தனர். இந்த சம்பவம் குறித்து செமஞ்செரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் ஜார்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக்கல் பைக் பேட்டரி நிரம்பியதால் வெடித்துள்ளது. பேட்டரி வெடித்த சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Categories

Tech |