சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்திருந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் எடுத்து செல்வதாக கடந்த 2007-ஆம் ஆண்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த இலங்கை தமிழர்களான சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் குற்றவாளியான சிவகரன், முத்து ஆகிய 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனையடுத்து கருணாகரன் வேலுச்சாமி, ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் 3 பேர் தலைமறைவாகவும், நாலு பேர் பிடிவாரண்டும், ஒருவர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.