ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடி குண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்களை உக்ரைனியர்கள் எழுதி வருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பல்வேறு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் இறந்த உறவினர்களின் பெயர்களை ரஷ்யபடைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது எழுதி உக்ரைனியர்கள் தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கின்றனர். போரில் உறவினர்களை பறிகொடுத்த உக்ரைனியர்கள், ரஷ்யப் படைகள் மீது வீச பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் மேல் உயிரிழந்தவர்களின் பெயர்கள், சாப வாசகங்களை ராணுவத்திற்கு நன்கொடை கட்டணம் செலுத்தி எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.