சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன் பட்டி பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் புதிய ராஜா என்பவர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் வீராசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி பஞ்சவர்ணம் முப்பது சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.