வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில்” மேய்ச்சலுக்கு வரும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகள் அருகில் உள்ள வனப் பகுதியான கொள்ளுமாமலையிலிருந்து வரும் மிலா, மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட மிருகங்கள் இப்பகுதியில் தான் தண்ணீர் குடித்து செல்லும். இதுபோன்று பழங்களில் வெடி வைத்து அந்த பகுதியில் இரை தேட வரும் மிலா மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று வீட்டு வளர்ப்பு விலங்க அஆடு உயிரிழந்துள்ளது” என்று கூறியுள்ளனர். இதுபோல் இனி நடக்காமல் இருக்க வனத் துறையும், காவல் துறையும் ஒருங்கிணைந்து விசாரணை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.