Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெட்டி கொல்லப்பட்ட ரவுடி…. தாய் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21வது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமியின மகன் வீரமணி(43). இவருக்கு செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன், ஒரு மகள் இருக்கின்றனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்,தெர்மல், கள்ளக்குறிச்சி போன்ற காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீசுதல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வீரமணியின் மகன்களில் ஒருவரான சிவகுமாரை, 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தனர். இதன் காரணமாக அவர்களை பழிவாங்க வீரமணி திட்டம்தீட்டி வந்துள்ளார். கடந்த வருடம் மகேஷ் குமாரின் நண்பரான ஜெயக் குமார் வீட்டில் வீரமணி வெடிகுண்டு வீசினார்.

இவ்வழக்கில் கைதான வீரமணி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதன்பின் தண்டணை காலம் முடிந்து சென்ற ஜூன் மாதம் 13-ஆம் தேதி அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவுவேளையில் வீரமணி நெய்வேலி 30வது வட்டத்திலுள்ள தனது தாய் கலியம்மாள் வீட்டில் தங்கினார். அப்போது இரவில் வீட்டு முன் கட்டிலில் படுத்து வீரமணி தூங்கி கொண்டிருந்தார். அதன்பின் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் வீரமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் வீரமணியின் சத்தம்கேட்டு கலியம்மாள் ஓடிவந்து பார்த்த போது, அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இது தொடர்பாக தகவலறிந்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் வந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கலியம்மாள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீரமணியை அவரது எதிரிகளான மகேஷ் குமார், பார்த்திபன், பிரசாத் மற்றும் 3 பேர் சேர்ந்து வெட்டிவிட்டு மோட்டார்சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |