வெட்டுக்கிளிகளை கொல்ல தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண்துறை மூலம் வெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை இரவு நேரத்தில் தெளித்துள்ளனர். காலையில் அப்பகுதிக்கு அருகில் உள்ள தளத்தில் வேலை செய்வதற்கு 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். இரவு தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து காற்றில் பரவியிருந்ததால் அதனை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சுவாசித்துள்ளனர்.
இதனால் உடல்நிலை மோசமடைந்து, தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கூறிய மருத்துவர் கூறியபோது பூச்சிக்கொல்லி மருந்திலிருந்த விஷத்தை சுவாசித்ததில் தொழிலாளர்களின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், தீவிர சிகிச்சையின் பிறகு அனைவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.