Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்…… புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதாமணி என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்தார். இதனை அடுத்து ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளரான நரசிம்மூர்த்தி என்பவர் தற்போது வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செயல் அலுவலராக பொறுப்பேற்ற நரசிம்ம மூர்த்திக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |