Categories
அரசியல் மாநில செய்திகள்

வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? – உங்களுக்கு தெரியுமா?…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. அதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளது வேதனை தருகிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விமர்சித்துள்ள அவர், அனைத்து மாநிலங்களிலும் வரி விதிப்பு குறைக்கப்படும் நிலையில் எந்த அடிப்படையில் தமிழகத்தின் சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் விளக்க வேண்டும். பாக்களை ஏய்த்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். சாமானியன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். அவன் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணைய் எது? சுண்ணாம்பு எது என அவனுக்கு நன்றாக தெரியும் என்ற அண்ணாவின் பொன்மொழியை தமிழக முதலமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |