வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கமலை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Producer Dr @IshariKGanesh met Ulaganayagan @ikamalhaasan Sir and invited him for @SilambarasanTR_ @menongautham #VendhuThanindhathuKaadu’s Grand Audio Launch going to happen on Sep 2nd !
An @arrahman Musical
Prod by @VelsFilmIntl
A @RedGiantMovies_ Release@Udhaystalin pic.twitter.com/Ja9S04tK7I— Vels Film International (@VelsFilmIntl) August 30, 2022