Categories
சினிமா தமிழ் சினிமா

“வெந்து தணிந்தது காடு” இதுதான் படத்தின் கதையா?…. செம சூப்பரா இருக்கும் போலயே?….!!!!

நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோ  பல ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு போதிய அளவு வருமானம் இல்லாததால் அம்மா மற்றும் தங்கையின் கஷ்டத்தை போக்குவதற்காக மும்பைக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக சில பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார். இந்த பிரச்சினைகளிலிருந்து ஹீரோ எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் கதையாக அமைந்துள்ளது என இணையத்தில் தற்போது தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் வெந்து தணிந்தது காடு படம் வெளியான பிறகுதான் உண்மை தன்மை தெரியவரும். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |