வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றது. அதன்படி வருகின்ற 13-ஆம் தேதி முதல் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இதனை அமேசான் நிறுவனம் தங்களின் இணையதள பக்கத்தில் போஸ்ட் மூலம் அறிவித்து இருக்கின்றது.
take an unvarnished look at the gangster world #VendhuThanindhathuKaaduOnPrime, Oct 13 pic.twitter.com/kixtugRSqV
— prime video IN (@PrimeVideoIN) October 11, 2022