சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா படம் வெளியாகியிருந்தது.
A Sunday well spent working, and having superb lunch specially cooked by art director rajeevan @@menongautham @SilambarasanTR_ pic.twitter.com/Lx2y76R1rO
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2021
தற்போது மீண்டும் இந்த மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை ராதிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராதிகா இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.