வெந்து தணிந்தது காடு படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் இயக்குனர் கௌதம்மேனனுக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் மீண்டும் சண்டைக்காட்சியை எடுப்பதற்கு சிம்பு மற்றும் கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் லக்னோவிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.