தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படம் நேற்று முதல் தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்புவின் நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் இசை, கௌதம் மேனனின் இயக்கம் என அனைத்தும் சிறப்பாக படத்தில் அமைந்துள்ளது என்று விமர்சனங்கள் வருகின்றன.
அதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படம் கௌதமேனனின் படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினை இப்படத்தை பற்றிய சில விமர்சனங்களை வந்த வண்ணம் உள்ளது. அதாவது படத்தின் கதை எந்தவித புதுமையும் இல்லை என்றும், நீளம் அதிகமாக இருக்கின்றது என்றும், காதல் காட்சிகள் சலிப்படைய செய்வதாக இருக்கிறது என்று விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை விஜயின் நெஞ்சினிலே படத்தின் கதை போலவே இருப்பதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.