சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த பின்னர் பத்து தல படத்தில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்யவுள்ளாராம் சிம்பு, அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு நடிக்கத் தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.