வெந்நீர் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் கொத்தனாரான ஆனந்தவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(3) என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியே அடுப்பில் வெந்நீர் வைத்து கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் இறங்கி வந்த தனுஸ்ரீ எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்திருந்த பானைக்குள் தவறி விழுந்தாள்.
இதனால் உடல் வந்து காயமடைந்த தனுஸ்ரீயை ராஜேஸ்வரி மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனுஸ்ரீ மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.