Categories
மாநில செய்திகள்

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறு; விளம்பரத்திற்காக செய்கிறார் – முதல்வர் விமர்சனம்!

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்,

தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

வென்டிலேட்டர்கள் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இதுவரை 11.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன, 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |