விஜய் சேதுபதி நடிக்கும் வெப் தொடரின் தலைப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கின்றார். இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்குகிறார்கள். இந்த வெப் தொடரில் கதாநாயகனாக ஷாகித் கபூர் நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்க முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கின்றார்.
இது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரானது சென்ற வருடம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தொடருக்கு “ஃபர்ஸி” என பெயரிடப்பட்டிருக்கிறது. வெளியான இந்த வெப் தொடரின் புகைப்படத்தில் விஜய்சேதுபதி மிரட்டும் வகையில் இருப்பது ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றது.