Categories
தேசிய செய்திகள்

இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்…. மத்திய அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக், தேச நலனுக்கு எதிராக செய்திகளை பரப்பிவிடும் இணையதளங்கள், யூடியூப் பக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரும் ஜனவரி 31-ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், சஃபாய் கர்மாச்சாரிஸ் தேசிய ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான முடிவுகள் குறித்து பேசினார்ஹ இதையடுத்து வெளியே வந்து காரில் ஏறிகின்ற சமயத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இந்திய தேசத்தின் நலனுக்கு எதிராக செய்திகள் பரப்பப்படும் இணையதளங்கள், யூடியூப்பக்கங்கள் உள்ளிட்டவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்தியை வெளியிட்ட 20 கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் முடக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை கேலி செய்த வகையில் சிறுவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விவரம் கேட்டிருந்தார். இதைப்பற்றி அண்ணாமலை பதிவிட்ட ட்விட் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. ஒரு வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மீறினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தேச நலனுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் இணையதளங்கள், ஊடகங்கள், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

Categories

Tech |