வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், மலைப்பிரதேசங்களில் ஒன்றான வால்பாறையில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்கின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 18- ஆம் தேதியிலிருந்து வால்பாறை பகுதியில் கோடை மழை தொடங்கியதால் சில இடங்களில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றன. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து இதமான சூழ்நிலை இருக்கின்றது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக மழை தொடர்ந்து பெய்வதால் நீரோடைகளில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் குளித்து சந்தோசம் அடைகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, வால்பாறையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இதை அனுபவிக்க விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தனர்.