நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார் .
சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, மீனா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘இரை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரை தூங்காவனம், கடாரம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். மேலும் ராதிகா சரத்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தற்போது இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.