ஹிந்தியில் தயாராகும் வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார்..
தமிழ் திரையுலகில் பிசியான நடிகருள் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி.. தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார். இந்த வெப் தொடரை ‘ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்குகின்றனர்..
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த தொடரின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரிஸில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் நடிகரான ஷாகித் கபூரும் நடிக்கிறார். இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்.
அதேபோல் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதற்கு பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ரெஜினாவுக்கு இது முதல் வெப் தொடர் ஆகும். நடிகர் விஜய் சேதுபதி- ரெஜினா இருவரும் ஏற்கனவே ‘முகிழ்’ என்ற தமிழ் படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.