Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டும்… தமிழரின் பாரம்பரிய உணவு..!!

வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் கம்மங்கூலின் நன்மைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வோம்.

தமிழனின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக விளங்குவது கம்மங்கூழ். கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு ஏகப்பட்ட குளிர்பானங்கள், மருந்துகள் என விற்கப்படுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அனைவரும் முந்தைய காலத்திலிருந்து வெயிலால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பழங்காலம் முதல் கம்மங்கூழ் தான் குடிப்பார்கள். குறிப்பாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு விஷியம் ஆகும்.  அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாக கூட இருக்கும்.

கம்மங்கூழின் நன்மைகள் :

1. தினமும் தவறாமல் கம்மங்கூழ் குடித்தால் அதில் இருக்கக்கூடிய கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும்.

2. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

3. பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுத்து விடலாம்.

4. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்து விடும்.

5. உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால் கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்.

6. மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

7. இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும்.

8. உடல் எடை குறைக்கும்.

9. கம்புவில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவும்.

10. இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைக்கும்.

11. கொலஸ்ட்ரால்கள் உடலில் படிவதைத் தடுக்கும்.

12. உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும்.

13. இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

14. பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

15. மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

16. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

17. அதிகமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை எளிதில் குறைத்து விடும்.

 

Categories

Tech |