தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் இடமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் இயல்பை விட 3 டிகிரி அதிகமாக கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல், 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகம் சூறைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.