Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில் இஞ்சி சாப்பிடலாமா?…. இத கொஞ்சம் படிச்சு பாருங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சில பொருள்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் காலநிலைக்கு ஏற்றவாறு அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குளிர்காலத்தில் உட்கொள்வது போல வெயில் காலத்தில் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. கோடையில் அதிகமாக இஞ்சி சேர்த்தால், அதில் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும். நெஞ்செரிச்சல் மற்றும் அமில தன்மையை அதிகரிக்கலாம். ஆகவே காலை அல்லது இரவில் 2 – 4 கிராம் அளவுக்கு மட்டும் இஞ்சி உட்கொள்ளலாம். இதனால் பிரச்சனை ஏற்படாது. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் இஞ்சியை தவிர்க்கலாம்.

Categories

Tech |