Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில்….” உடம்புக்கும், வீட்டுக்கும் தேவையான தயிரை”… கட்டாயம் இப்படி பயன்படுத்துங்க..!!

தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம்.

தயிரால் ஏற்படும் பயன்கள்:

அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது

வீட்டுத் தேவைக்கு

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

தயிர் புளிக்காமல் இருக்க இரண்டு அல்லது மூன்று நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காமல் இருக்கும்.

வெண்டைகாய் வதக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கினால் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கைகளை கழுவினால் நல்லது.

Categories

Tech |