Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில் முகம் வறண்டு போகிறதா?…. இதோ எளிய தீர்வு….!!!

வெயில் காலத்தில் பலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதனை போக்கி முகத்தை மென்மையாக மாற்ற எளிய வழிகள் பல இருக்கின்றன.

வறண்டு போன சருமத்துக்கு பாசிபருப்பு பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முதத்தை கழுவினால், உடனடியாக முகம் ஈரப்பதத்துடன், மென்மையாக மாறிவிடும். அல்லது இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இரவு உறங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும். இதை செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறுவிடும்.

Categories

Tech |