நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் பார்ப்போம்.
முதலில் வினிகர், வினிகரை ஒரு காட்டன் துணியில் எடுத்து அதை நமது அக்குளில் தேய்த்து வந்தால் துர்நாற்றத்தை உருவாகும் பாக்டீரியாவை கொள்ளும்.
எலுமிச்சை, எலுமிச்சையில் துர்நாற்றத்தை போக்கும் வாசனை உள்ளது. எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் அடிவயிற்றுப் பகுதியில் தடவவும். நீங்கள் வெளியே செல்லும் போது இவ்வாறு செய்து வந்தால் துர் நாற்றம் வராது.
தேனீர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் கிரீன் டீயை சேர்த்துக் கொதிக்கவிடவும். ஆறியபின் காட்டன் துணியால் நனைத்து வியர்வை ஏற்படும் இடத்தில் தடவினால் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
தக்காளி சாற்றை 20 அல்லது 30 நிமிடங்கள் ஊற வைத்து அந்த நீரில் குளித்தால்வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
பேக்கிங் சோடா ஈரப்பதத்தை உறிஞ்சிவதற்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைப்பதற்கும் உதவும். பேக்கிங் சோடாவை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் போது டால்கம் பவுடர் போல பயன்படுத்தலாம். இதனால் வியர்வை துர்நாற்றத்தை குறைக்க முடியும்.