Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வெயில் காலம் வந்துவிட்டு”, இனி எல்லாத்தையும் பறிச்சிட வேண்டியதான்…. ஒரு கிலோ 100 ரூபாய்…. தேனியில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தேனியில் பஞ்சு மரத்திலிருந்து இலவம் காய்களை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் இலவம் மரங்களை பயிரிட்டு அதனை அறுவடை செய்வது வழக்கம். இந்நிலையில் தேனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் கணக்கில் பஞ்சு மரங்கள் பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது கோடை காலம் ஆரம்பித்ததால் பஞ்சு மரங்களிலிருக்கும் காய்கள் காய்ந்து போக தொடங்கிய நிலையில் அதனை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர்கள் மூலம் அதிலிருக்கும் பஞ்சுகளை அகற்றி மூட்டையாக கட்டி வைக்கின்றனர். இதனை மெத்தை மற்றும் தலையணை தயாரிப்பாளர்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஒரு கிலோ இலவம்பஞ்சுகள் 100 ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |