திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மக்கள் மழை பெய்யுமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து நேற்று மதியத்தில் இருந்து திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இந்த மலையானது ஒரு மணி நேரம் நீடித்தததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருந்தது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.