Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழை…. மனம் குளிர்ந்த மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வாங்கியது. அதன் பிறகு 4 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென மழை தொடங்கியது.

அதன்படி நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி கிடந்தது. அதுமட்டுமில்லாமல் பாளையங்கோட்டை பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிகளில் லேசாக மழை தூரிக் கொண்டே இருந்தது.

Categories

Tech |