செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளத்தால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.