பூங்காவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லண்டன் இசில்வொர்த்தில் உள்ள தோர்ன்பரி பூங்காவில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வன்கொடுமையை செய்த 21 வயதான இளைஞரை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையை கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது என்றும் அந்தப் பெண் பாதுகாப்பாக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.