Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராதிகா… வெளியான வீடியோ… ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

நடிகை ராதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதிகா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்து நடித்து அசத்தினார்.

கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்து வந்த ராதிகா திடீரென இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். தற்போது நடிகை ராதிகா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை நடிகை ராதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யமடைந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |