வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பரணி, சிங்கம்புலி, பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Very happy to release the first look video of #Aneethi from Dir @Vasantabalan1 sir 😊
ANEETHI – Official Title Teaser ⏩ https://t.co/cmQkVdyDXJ
Best wishes to @iam_arjundas @officialdushara @gvprakash @UBoyzStudios and the entire team for a huge success👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2021
இந்த படத்தை வசந்தபாலன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதன்படி இந்த படத்திற்கு ‘அநீதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அதிரடியான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.