Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெறிநாய் கடிதத்தில் பார்வையை இழந்த மாணவி…. பெற்றோர் விடுக்கும் கோரிக்கை…. சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசம்பட்டி அருகே பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். மஞ்சமேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. மாற்றுதிறனாளியான இவர் 2 கால்கள் செயலிழந்து வீட்டிலேயே இருக்கிறார். இவரது மனைவி சாந்தி ஆவார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஆசினி அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சென்ற 1ஆம் தேதியன்று ஆசினி பள்ளிக்கு சென்றார்.

இதையடுத்து ஆசினி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திடீரென்று புகுந்த வெறி நாய் மாணவி ஆசினியை பல்வேறு இடங்களில் கடித்துகுதறியது. மேலும் கண் பகுதியில் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு கண் வீக்கமடைந்தது. இதற்கிடையே பலத்த காயமடைந்த மாணவி போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆசினியை பரிசோதித்த மருத்துவர்கள் வெறி நாய் கடித்ததால் மாணவிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன்பின் பெற்றோர், மாணவியை சென்னை உள்ளிட்ட பல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் மாணவி கண் பார்வையில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பணம் இல்லாத காரணத்தால் மாணவியின் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவிக்கு உயர் சிகிச்சையளிக்க உதவுமாறு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |