வெறிநாய் கடித்த பசுவை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான பசு மாட்டை வெறிநாய் கடித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக வெறி பிடித்து அந்த பசு சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் தீயணைப்புதுறை, கால்நடைதுறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுமாட்டை மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். அதன்பிறகு சிகிச்சைக்காக பசுமாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.