Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெறியாட்டம்..! ஒரே ஓவரில் 6,6,6,6,6,6,6….. “மொத்தம் 16″….. உலக சாதனை படைத்த ருதுராஜ்..!!

உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார்.

இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில் ராகுல் திரிபாதி  9 ரன்களில் அவுட் ஆனார்.. அதைத் தொடர்ந்து வந்த சத்யஜீத் பச்சாவ் 11 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ருதுராஜ் – சத்யஜீத் பச்சாவ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிவந்தனர்.

இதையடுத்து சத்யஜீத் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  பின் அசிம் காசியுடன் ஜோடி சேர்ந்து ருதுராஜ் அதிரடியாக ஆடினார். தொடர்ந்து ருதுராஜ் சிறப்பாக ஆடி சதம் விளாசிய நிலையில், காசி  37 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் வந்த திவ்யாங் ஹிம்கனேகர் 1  ரன்னில் அவுட் ஆனார். ஆனாலும் கடைசி வரைக்கும் அவுட் ஆகாமல் ருதுராஜ் 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர் உட்பட 220 ரன்கள் குவித்தார். இறுதியில் மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் இரட்டை சதம் விளாசிய ருதுராஜ் குறிப்பாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங் வீசிய 49 வது ஓவரில் மட்டும் நோபால் உட்பட 7 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். மொத்தம் 43 ரன்கள் அந்த ஓவரில் கிடைத்தது. இதனால் ஒரே ஓவரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.  அதாவது துராஜ் கெய்க்வாட், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ருதுராஜ் தனது முதல் லிஸ்ட்-ஏ இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்..

திறமையான தொடக்க ஆட்டக்காரர் 2021 முதல் விஜய் ஹசாரே தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 197.5, SR 115. 6 100s (இரட்டை சதம் உட்பட) 987 ரன்கள் எடுத்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் இதுவரை ஆடிய கடைசி 8 இன்னிங்ஸ்களில் 136, 154 (நாட் அவுட்), 124, 21, 168, 124 (நாட் அவுட்),  40, 220 (நாட் அவுட்) ஆகியவை அவரது ரன்களில் அடங்கும். அதாவது வெறும் 8 இன்னிங்ஸில் 5 சதம், ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் தற்போது உலகின் அதிகபட்ச லிஸ்ட் ஏ கிரிக்கெட் சராசரியைக் கொண்டுள்ளார் (நிமி. 50 இன்னிங்ஸ்) – 58.71 (69 இன்னிங்ஸ்களில் 3758 ரன்கள்). அவர் இங்கிலாந்தின் சாம் ஹெய்னை (58.54) கடந்தார். ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை  பெற்ற ருதுராஜ், 16 அரைசதங்கள் தவிர வெறும் 70 ஆட்டங்களில் கெய்க்வாட் அடித்த 13வது லிஸ்ட் ஏ சதம் இதுவாகும்.

ஐபிஎல்லில் ருதுராஜ் சென்னை அணிக்காக 2 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை சென்னை அணி தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/REBALUNIVERSAL/status/1597133905064525826

Categories

Tech |