தமிழகத்தில் வெறி மற்றும் வீரம் என்று பார்க்கையில் நீங்கள் யார் பக்கம் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயிக்க வேண்டும் என துடிப்பவர்கள் நாட்டுக்காக துணிகிறார்கள். முன்னது வெறி, பின்னது வீரம்… நீங்கள் யார் பக்கம்?” என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.