Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறியூட்டி…. தூண்டிவிட்டு…. ஏமாற்றி… திருப்பி விடுறாங்க…. பல சான்றுகள் இருக்கு …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விக்ரமன் பாமக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட தம்பிகள் சூர்யா மற்றும் அர்ஜுனன் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், இரண்டாம் புத்தர் வாழும் அண்ணன் அம்பேத்கர் அவர்கள், அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் தம்பிகள் இரண்டு பேரை இழந்து இருக்கிறோம்.

தம்பி சூர்யா மற்றும் தம்பி அர்ஜூனன் என்ன காரணத்தினால் இழந்தோம். ஜாதி  வெறிக்கு இரண்டு தம்பிகளை நாம் பழி  கொடுத்துள்ளோம். யாருடைய ஜாதி வெறி, அறிவு  பூர்வமாக எதையும்  அணுக  தெரியாத, அரைவேக்காடு புத்தி இல்லாத, வன்முறை கும்பலுடைய ஜாதி வெறிக்கு நம்முடைய தம்பியை  இழந்து இருக்கிறோம்.

இரண்டு தம்பிகளும் ஒழுக்க சீடர்கள். குடி பழக்கம் கிடையாது, புகை பழக்கம் கிடையாது, இரண்டு பேரும் ரொம்ப ஒழுக்க சீடர்கள். அவர்களை அந்த ஜாதி வெறியர்கள், பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்கள், ஜனநாயக முறையில் ஒரு வேட்பாளருக்கு வாக்கு கேட்டார்கள் என்பதற்காக, அடித்து கொன்று  இருக்கிறார்கள். இந்த ஜாதி வெறியர்கள் எப்படி வந்து ஒரு கட்சியாக ஒருங்கிணைந்து  நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்சி, ஒரு சமுதாயத்தை, வெறியூட்டி ,தூண்டிவிட்டு, ஏமாற்றி, வஞ்சனை செய்து அவர்களுடைய வாக்குகளை மட்டுமே குறிவைத்து…. தமிழ் சமுதாயத்திற்கு எதிராக திருப்பி விடுவது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எப்படி திருப்பிவிடுவது ? என்பதற்கு பல சான்றுகளை நாம் சொல்லலாம் என விமர்சித்தார்.

Categories

Tech |