நாட்டில் முஸ்லிம்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவை தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவை சேர்ந்த ஷாகின் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே எம் ஜோசப் ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் கபில் சிபில் வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த எம் பி பர்வேஷ் வர்மா முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பேசி இருப்பதாக குறிப்பிட்டு வாதிட்டுள்ளார்.
அப்போது நீதிபதிகள் வெறுப்பு பேச்சில் முஸ்லிம் ஈடுபட்டால் என கேட்டேன் அதற்கு கபில் சிபில் வெறுப்பு பேச்சில் முஸ்லிம்கள் ஈடுபட்டால் அவர்களை போகட்டும் என விட்டுவிடுவார்களா அப்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் நீதிபதிகள் ஜனநாயக மதசார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலை கொள்ள செய்கின்றது வெறுப்பு பேச்சுக்கள் கண்டிக்க தக்கவை ஆகும்.
இது 21 ஆம் நூற்றாண்டு அரசமைப்பு சாசனத்தின் 51 ஏ பிரிவு அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டும் என கூறுகிறது ஆனால் இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம் என வேதனை தெரிவித்துள்ளனர். அதன்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகின்றோம் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசப்படும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பான புகார்களுக்கு காத்திருக்காமல் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் அரசுகளுக்கு உத்தரவிடுகின்றோம். மேலும் புகார்களை பதிவு செய்ய மறுத்தால் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை யாக பார்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.