பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர்.
சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்கள் கொண்ட பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேற யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Give up hatred, not social media accounts. pic.twitter.com/HDymHw2VrB
— Rahul Gandhi (@RahulGandhi) March 2, 2020
இந்த டுவிட்டால் அவரை டுவிட்டர் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் ஃபாலோயர்களாக இருக்கும் கோடிக்கணக்கான ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது அறிவிப்பை தொடர்ந்து பலர் ‘ட்விட்டரை விட்டு போகாதீங்க மோடிஜீ’ என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மோடியின் டிவிட்டிற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி, “வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடக கணக்கை அல்ல,” என்று ட்வீட் செய்துள்ளார்.